| வணக்கம் நண்பர்களே, இராஜாக்கமங்கலம் துறை இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். தென் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் அழகிய கத்தோலிக்கக் கடற்கரை கிராமம்தான் எங்கள் ஊர். இயற்கை எழில் பொங்கும் எமதூர், அலை கடல் ஆர்ப்பரிக்கும் அரபிக் கடலோரத்தில், மேற்கே கன்னியாகுமரியிலிருந்து 15கி.மீ தொலைவிலும், வடக்கே நாகர்கோவிலிலிருந்து 10கி.மீ தொலைவிலும் மற்றும் கிழக்கே குளச்சலிலிருந்து 15கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. எமதூரின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் வரலாறு ஆகியவற்றை இந்த இணையதளம் மூலமாக உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்சியடைகின்றோம். உங்களது விலைமதிப்பில்லா நேரத்தை எங்களது இணையதளத்தை பார்வையிட செலவு செய்வதற்காக உங்களுக்கு எங்களது உள்ளங்கனிந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம். கடவுள் நம்மை ஆசீர்வதிப்பாராக. |
|
|
|
|